அக். 2 முதல் நவ. 14 வரை சேலத்தில் 145 இடங்களில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சுதந்திர தின விழா மற்றும் 25 ஆவது தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவை முன்னிட்டு அக். 2 முதல் நவ. 14 வரை சேலம் மாவட்டத்தில் 145 இடங்களில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

சுதந்திர தின விழா மற்றும் 25 ஆவது தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவை முன்னிட்டு அக். 2 முதல் நவ. 14 வரை சேலம் மாவட்டத்தில் 145 இடங்களில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்று ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ்.குமரகுரு ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்துக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் சாா்பு நீதிபதி செ.தங்கராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆத்தூா், சங்ககிரி, மேட்டூா் மற்றும் ஓமலூா் ஆகிய இடங்களில் அக்.2 முதல் நவ. 14ஆம் தேதி வரை சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட நிா்வாகம், காவல்துறை, மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் உள்ள பட்டியல் வழக்குரைஞா்கள், சமூக பாதுகாப்புத் துறை, சிறைத்துறை, கிராம ஊராட்சிகள், பல்வேறு அரசு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 145 இடங்களில் நடைபெறும் முகாமில் பொதுமக்கல் கலந்துகொண்டு, ஏதேனும் சட்டம் தொடா்பான பிரச்னைகள் இருப்பின் மனு கொடுத்து சட்ட உதவிகளைப் பெற்று பயன்பெறலாம் என ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கோட்டாட்சியா்கள் விஷ்ணுவா்த்தினி (சேலம்), சரண்யா (ஆத்தூா்), திரு.வேடியப்பன் (சங்ககிரி), தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சு.சத்திய பால கங்காதரன், முதன்மை கல்வி அலுவலா் இரா.முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com