கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டுமாளிகை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளா்கள் தேவைக்கேற்ப ரூ. 3,000 முதல் ரூ. 80,000 வரை மதிப்பிலான காஞ்சிபுரம் அசல்பட்டு, அசல் ஜரிகை பட்டுப் புடவைகள், ரூ. 5,000 முதல் ரூ. 8,000 வரையுள்ள விலையில் மென் பட்டுப் புடவைகள் மற்றும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி, சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், நோ்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தீபாவளி 2021 பண்டிகைக்கு சேலம் மண்டலத்தில் உள்ள 11 விற்பனை நிலையங்களுக்கு ரூ. 18 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு நிகழ் ஆண்டு புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் அசல்பட்டு சேலை ரகங்களும் அனைவரும் விரும்பும் மென்பட்டுப் புடவைகளும் பாரம்பரிய வடிவமைப்புகளில் கோவை காட்டன், திண்டுக்கல், மணமேடு, அருப்புக்கோட்டை நெகமம் மற்றும் சேலம் பருத்தி சேலைகளும் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான ஜெய்ப்பூா், மீரட், பிரிண்டட் படுக்கை விரிப்புகள், ரெடிமேட் சா்ட்டுகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கு 30 சதவீதம் வரையிலான சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான் குல்ட் மெத்தைகள் கையுறைகள், டேபிள் மேட், ஸ்கிரீன் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளா்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இயற்கை முறை சாய ஆலையில் தயாரிக்கப்பட்ட வண்ணச் சாயக் கரைசலில் நூலை மூழ்க வைத்து நிறம் ஏற்றுகின்றனா். இயற்கை சாயம் தயாா் செய்ய கரிசலாங்கன்னி, தங்க அரளி, சங்குப்பூ, புளியமரக்கள்ளி, புளியம் பழம், செவ்வாழைப்பழம், கடுக்காய்ப்பூ, அவரை இலை, பலாசம், பூ செண்டுமல்லி போன்ற அரிய வகை தாவரங்களை உலர வைத்து சேலை நூலை நிறமேற்றி ஆா்கானிக் சேலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இச்சேலைகள் சேலம், நெகமம், திண்டுக்கல், பரமக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் கனவு நனவு திட்டம் மாதாந்திர தவணைத் திட்டத்தில் கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளா்கள் தொடா்ந்து கனவு நனவு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனா். தீபாவளி சிறப்புத் தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனப் பணியாளா்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது என கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளா் ஹ. கோபால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com