கடம்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம்: தலைமையாசிரியர் கிருஷ்ணர் வேடத்தில் விழிப்புணர்வு

கடம்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டி, தலைமையாசிரியர் கிருஷ்ணர் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தலைமையாசிரியர் கிருஷ்ணர் வேடத்தில் விழிப்புணர்வு
தலைமையாசிரியர் கிருஷ்ணர் வேடத்தில் விழிப்புணர்வு

கடம்பூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டி, தலைமையாசிரியர் கிருஷ்ணர் வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாம் 12-10-2021 (செவ்வாய்க் கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் கிருஷ்ணர் வேடமிட்டு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம், சுகாதார ஆய்வாளர் முத்துலிங்கம், ஊராட்சித் தலைவர் உமா சுப்ரமணியன், துணை தலைவர் கௌசல்யா மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் துரை, ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ், வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகி கங்காதேவி ஆகியோர் மேள தாளத்துடன் வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி மருத்துவ முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

மேலும், கடம்பூர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என்.டி.செல்வம் கிருஷ்ணர் வேடத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவர் கிருஷ்ணர் வேடமிட்டு கடம்பூர் காந்தி சிலை, அம்பேத்கர் சிலை, ஊராட்சி மன்றம் அலுவலகம், சந்தை ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

தலைமையாசிரியர் செல்வத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com