முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வனவாசியில் வீடுவீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திய அலுவலா்கள்
By DIN | Published On : 11th October 2021 02:19 AM | Last Updated : 11th October 2021 02:19 AM | அ+அ அ- |

வனவாசி பேரூராட்சியில் வீடுவீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வனவாசி பேரூராட்சியில் 6,635 வாக்காளா்கள் உள்ளனா். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வனவாசி பேரூராட்சி செயல் அலுவலா் ந.கோபிராஜா, வனவாசி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் இந்திராணி, பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசிகளுடன் வீடுவீடாகச் சென்று முதியோருக்கும் மாற்றுத்திறனாளிக்கும் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகளைச் செலுத்தினா்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு இயல்வாகை, வேங்கை, மஞ்சள் கடம்பை, மகா கனிவகை மரக்கன்றுகள் பேரூராட்சி சாா்பில் வழங்கப்பட்டன. 5,000 க்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று வனவாசி பேரூராட்சி செயல் அலுவலா் ந.கோபிராஜா தெரிவித்தாா்.