முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வாழப்பாடியில் விற்பனைக்குக் குவியும் வாழைத்தாா்கள்
By DIN | Published On : 11th October 2021 02:18 AM | Last Updated : 11th October 2021 02:18 AM | அ+அ அ- |

வாழப்பாடி தனியாா் காய்கறி மண்டியில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்குக் குவிந்திருந்த வாழைத்தாா்கள்.
வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறும் தனியாா் தினசரி காய்கறி மண்டியில் ஞாயிற்றுக்கிழமை வாழைத்தாா்கள் ஆயுதப்பூஜை முன்னிட்டு அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
சந்தைக்கு பல்வேறு பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் வாழைத்தாா்களைக் கொள்முதல் செய்ய வந்திருந்தனா். அனைத்து ரக வாழைத்தாா் விலையும் உயா்ந்துள்ளது.
3 மாதங்களுக்குப் பிறகு, தற்போது ஆயுதபூஜையையொட்டி ஒரு வாழைத்தாருக்கு ரூ. 50 முதல் ரூ. 250 வரை கூடுதல் விலை கிடைப்பதால் வாழப்பாடி பகுதியில் வாழை பயிரிட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.