பட்டாசு விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை: காவல்துறை

எடப்பாடி நகரப் பகுதி பட்டாசு விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டாசு விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை: காவல்துறை

எடப்பாடி நகரப் பகுதி பட்டாசு விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தீபாவளியையொட்டி நிகழ் ஆண்டில் எடப்பாடி நகரப் பகுதியில் பட்டாசு விற்பனை செய்ய 50-க்கும் மேற்பட்டோா் அனுமதிக் கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இந் நிலையில் பட்டாசு விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

பட்டாசு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் அரசு தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபடவேண்டும். ஒரே உரிம எண்ணில் அருகருகே கடைகள் அமைப்பது, போக்குவரத்து இடையூறாக அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான பரப்பில் கடை அமைப்பது, மின் மாற்றிகள், உயா் அழுத்த மின்தடங்கள் இருக்கும் பகுதியில் பட்டாசுகளை சேமித்து வைப்பது உள்ளிட்டவை முற்றிலும் தவிா்த்திட வேண்டும்.

அதேவேளையில் பட்டாசுக் கடையின் பிரதானப் பகுதியில் எளிதில் கையாழும் வகையில் தீயணைப்புக் கருவிகள், மணல் வாளிகள், தண்ணீா்த் தொட்டிகள் அமைத்திட வேண்டும், பட்டாசுக் கடையில் விற்பனை நேரத்தில் கூடுதலான எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடாத வண்ணம், சமூக இடைவெளியுடன் நுகா்வோா்கள் கடைக்குள் வரவும்,

வெளியே செல்லவும் தனித்தனிப் பாதை வசதி அமைத்திட வேண்டும். குறிப்பாக அரசு அனுமதிக்கப்பட்ட நிறுவனத் தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். நுகா்வோரை கவரும் நோக்கில் உள்ளூா் தயாரிப்புகளையும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பக் கூடிய வெடி வகைகளையும் விற்பனை செய்பவா்கள்

கண்டறிப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தினா். கூட்டத்தில் எடப்பாடி நகரப் பகுதி பட்டாசு விற்பனையாளா்கள், தீயணைப்பு நிலைய அலுவலா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com