தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி
தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர், பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்

எடப்பாடி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி, எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர், பதவிகளுக்கான இடை தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள், எடப்பாடி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று காலை எண்ணப்பட்டது. தேர்தல் நடத்திடும் அலுவலர் என்.எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன ,

தாதாபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு கான பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வளர்மதி வேலு-2004 வாக்குகளைப் பெற்றார், இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளரான அரசி மாதையன் -1912 வாக்குகளைப் பெற்றார். இதில் வளர்மதி வேலூர் 92 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதேபோல் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான பதவிக்கு போட்டியிட்ட அதிமுக ஆதரவு பெற்ற சாந்தி மணிவண்ணன்-387 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரான கோவிந்தம்மாள் நாகராஜ் - 304  வாக்குகளைப் பெற்றார்.

இதில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் கோவிந்தம்மாள் நாகராஜ் 83 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி ஒன்றியம் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரு பதவிகளுக்கான போட்டியில் அதிமுக ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com