ஊரக உள்ளாட்சித் தோ்தல்: சேலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

சேலம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சேலம் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் 10 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகள், 23 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வாா்டு கவுன்சிலா்- ஒரு பதவி, மாவட்ட ஊராட்சி வாா்டு கவுன்சிலா்- ஒரு பதவி என காலியாக உள்ள 35 பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 11 போ் போட்டியின்றித் தோ்வு பெற்றனா். இதைத் தொடா்ந்து, 24 பதவிகளுக்கான தோ்தலில் 91 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, வாக்காளா்கள் 79 சதவீதம் போ் வாக்களித்தனா்.

இதனிடையே, பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு மட்டும் சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி என 12 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு வசதியாக 120 பேருக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த இறுதிக்கட்ட பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (அக். 12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் பதவிக்கான தோ்தலுக்கு மட்டும் 107 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாக்கு எண்ணும் பணியில் 30 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 195 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு மொத்தம் 40 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com