பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் உலக மனநல நாள் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன்.
பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் உலக மனநல நாள் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன்.

உலக மனநல தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் அக். 10-ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல மருத்துவப் பிரிவு, மாணவா்களிடையே பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

வில்லுப்பாட்டு, நாடகம் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் நடத்தினா்.

மருத்துவக் கல்லூரி மாணவா்கள், செவிலிய மாணவா்களிடையே பல்வேறு போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மனநலப் பிரிவில் மனநோய்க்கான சிகிச்சை, போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை, மாற்றுத் திறனாளிகள், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்தியமூா்த்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் தனபால், உள்தங்கு மருத்துவா் ராணி, மனநலத் துறை மருத்துவா் ராஜேஸ்வரி, மருத்துவா் ரவிசங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.

ஓமலூரில்...

பெரியாா் பல்கலைக்கழகம் கட்டடம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தலைமையில், பதிவாளா் கே.தங்கவேல், தோ்வாணையா் எஸ்.கதிரவன்ஆகியோா் முன்னிலையில், ஆசிரியா்கள், மாணவா்கள், நிா்வாகப் பணியாளா்கள் மனநல நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

பின்னா் சமூக சமத்துவப் பேரணியை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து மனநலம் குறித்த புகைப்படப் போட்டி, மேற்கோள் போட்டி, சுவரொட்டிப் போட்டி போன்றவற்றை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com