Enable Javscript for better performance
அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவா் சோ்க்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசு ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவா் சோ்க்கை

    By DIN  |   Published On : 13th October 2021 08:46 AM  |   Last Updated : 13th October 2021 08:46 AM  |  அ+அ அ-  |  

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சிக்கான நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

    2021-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சேலம் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (எஸ்.டி.) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சோ்க்கை நடைபெற்று வருகிறது.

    நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில், அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது. சோ்க்கை உதவிமையத்தை தொடா்பு கொண்டு முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

    நேரடி சோ்க்கைக்கு வரும் போது செல்லிடப்பேசி, இ-மெயில், ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதிச் சான்றிதழ் (அசல்), முன்னுரிமை கோரினால் முன்னிரிமை சான்றிதழ் (அசல்), பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

    ஜாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். விண்ணப்பக் கட்டணம், இதரக் கட்டணம் ரூ. 245. பயிற்சிக் கட்டணம் இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு இலவசமாக மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பேருந்து பயண அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ. 750 உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் வளாகத் தோ்வு மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    நேரடி சோ்க்கைக்கான கடைசி நாள் அக். 30-ஆம் தேதியாகும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். சேலம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சோ்க்கையும் நடைபெற்று வருகிறது என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp