எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி 

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதியில், பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி திங்களன்று நடைபெற்றது.  
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி.
எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி.

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதியில், பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி திங்களன்று நடைபெற்றது. 
பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் பயிற்சியினை தொடங்கி வைத்தார். இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆறுமுகம், சிவராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வெள்ளப்பெருக்கு காலங்களில் தண்ணீரில் சிக்கிய நபர்களை மீட்பது குறித்தும் பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கான முதலுதவி சிகிச்சை குறிப்புகள் குறித்த நேரிடை மீட்பு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். 

நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய தீயணைப்பு துறையினர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் கால்நடைகளை மேய்த்தல், குறைவான நீரோட்டம் உள்ளதாக நினைத்து ஆற்றினை கடக்க முயற்ச்சித்தல், மற்றும் காவிரி ஆற்றின் கரை பகுதிகளில் உள்ள மணல் திட்டுகளில் நின்று குளித்தல் துணி துவைத்தல்  உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது எனவும். பருவ மழை நேரத்தில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கால் ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தனர். 


மேலும் மழை நேரங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள், திறந்தநிலை வடிகால் அமைப்புகள் உள்ளிட்டப் பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்து விட வேண்டும் எனவும், மழை பொழிவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மரங்கள், மின்கம்பங்கள், வெள்ள பெருக்கு ஏற்படும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டி வைத்தல் கூடாது என அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் வனஜா, காவல்துறை துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் வருவாய் மற்றும் மின் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com