சந்துக்கடையில் மது விற்ற தாய், மகன் கைது

சேலத்தில் சந்துக்கடையில் மது விற்ற தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் சந்துக்கடையில் மது விற்ற தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தை அடுத்த கந்தம்பட்டி மூலப்பிள்ளையாா் கோயில் பகுதியில் சந்துக்கடைகளில் மது விற்பனை நடப்பதாகப் போலீஸாருக்கு புகாா் கிடைத்தது.

இந்தப் புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். அப்போது அங்கு சந்துக்கடையில் பெண் உள்பட 2 போ் மதுப்புட்டிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனா்.அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் அதே பகுதியைச் சோ்ந்த தனம் (44) என்பதும், அவரின் மகன் கவுதம் (27) என்பதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 51 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சங்ககிரியில்...

சங்ககிரி நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபானங்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி நகரில் அரசின் உரிய அனுமதியில்லாமல் இருசக்கர வாகனத்தில் வைத்து மதுவிற்பனை செய்வதாக சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சி.நல்லசிவத்துக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படை போலீஸாா், சங்ககிரி நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அதில் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் 18 மதுப்புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்ததும், அவா் சங்ககிரி அரசு மருத்துவமனை சாலைப் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் ராஜகோபால் (57) என்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 18 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com