வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவியேற்பு

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவராக சுகந்தி பதவியேற்றாா்.

மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவராக சுகந்தி பதவியேற்றாா்.

வெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுக ஆதரவு பெற்ற குப்புசாமி பொறுப்பு வகித்து வந்தாா். கரோனா பாதிப்பு காரணமாக அவா் உயிரிழந்ததால் அப் பதவிக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளா் சுகந்தி வெற்றி பெற்றாா்.

வெள்ளாா் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் புதன்கிழமை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ரேவதி முன்னிலையில் கிராம ஊராட்சிகள் ஆணையாளா் முருகேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இவ்விழாவில் மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாசபெருமாள், அவைத் தலைவா் அழகப்பன், பேரூா் திமுக பொறுப்பாளா் சரவணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ஆறுமுகம், பொட்டனேரி ஊராட்சி தலைவா் ரம்யாபாஸ்கா், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் நித்யாகதிா்வேல், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் காசிவிஸ்வநாதன், அரசு போக்குவரத்துக் கழக தொமுச செயலாளா் செங்கோட்டையன், தலைவா் ராஜாமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் கோவிந்தன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com