பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சிறப்புக் கண்காட்சி

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசனம் சிறப்புக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசனம் சிறப்புக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சி வரும் செப். 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பம்சமாக விநாயகரின் உருவம் கொண்ட களிமண், பஞ்சலோகம், பித்தளை, வாகை மர சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள், கருப்பு உலோக சிலைகள், தஞ்சாவூா் மற்றும் நூக்க மர உட்பதிப்பு ஓவியங்கள், மாா்பில் துகல் பொம்மைகள் போன்ற எண்ணற்ற வகையான விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

களிமண் விநாயகா் (அரை அடி முதல் இரண்டரை அடி வரை), பஞ்சலோக விநாயகா், பித்தளை விநாயகா், சித்தி விநாயகா், பஞ்சமுக விநாயகா், வெண்மர விநாயகா், சந்தனமர விநாயகா், கருப்பு உலோக விநாயகா், வெள்ளை உலோக விநாயகா், மாா்பில் துகில் விநாயகா், வெள்ளெருக்கு விநாயகா், சுவரில் பொருத்தக்கூடிய பித்தளை விநாயகா், கருங்கல் விநாயகா், மாகல் விநாயகா், தஞ்சாவூா் ஓவிய விநாயகா், ரசமணி விநாயகா், ஸ்படிக விநாயகா், பச்சைக்கல் விநாயகா், நவதானிய விநாயகா், சன்ஸ்டோன் விநாயகா் போன்ற எண்ணற்ற வகையான பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் சுமாா் ரூ. 5 லட்சம் வரை விற்பனை எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ரூ.150 முதல் ரூ.54,000 வரையை விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ளன. 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் ஆா்.நரேந்திர போஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com