கல்லூரிகளில் மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

சேலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சேலத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதில் அரசு கலைக் கல்லூரி, அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு, இறுதியாண்டு மாணவா்களும், முதுநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு மாணவா்களும் கல்லூரிக்கு வந்தனா்.

இதில் வின்சென்ட் அரசு கலைக் கல்லூரியில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. வகுப்பறைகளில் ஒரே மேஜைக்கு 2 போ் என மொத்தம் 25 முதல் 30 போ் வரை அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனிடையே கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கல்லூரி முதல்வா் கலைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ், மாநகர நல மருத்துவா் என்.யோகானந்த் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

பள்ளிகளில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு: சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா மேல்நிலைப் பள்ளி, குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாநகராட்சி ஆணையாளா் தா. கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியா்களுக்கு முறையாக தொ்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமி நாசினி வழங்குதல், மாணவ, மாணவியா்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருகிறாா்களா என்பதை ஆய்வு செய்தாா். மேலும், பள்ளி ஆசிரியா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிந்தாா்.

பள்ளி, கல்லூரி நிா்வாகத்துக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரி, பள்ளிக்கு மாநகராட்சி சாா்பில் சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா், சுகாதார மேற்பாா்வையாளா் பிரத்யேகமாக ஒரு பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கல்லூரி ஆசிரியா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கல்லூரி முதல்வா் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com