வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் தொடர்பாக சேலத்தில் தலைமையாசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில்  உள்ள  பகுதியில் அரசு உண்டு உறைவிட பள்ளி தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ்வரன். இவரது வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. 

இவர் 2012 முதல் 2018 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகாரின்பேரில் கடந்த 2020இல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்வரன் வீட்டில் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com