நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற வாழப்பாடி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை க.ஷபிராபானுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் ஆசிரியை க.ஷபிராபானுவுக்கு நல்லாசிரியா் விருதை வழங்கிய ஆட்சியா் செ.காா்மேகம்.
சேலத்தில் நடைபெற்ற விழாவில் ஆசிரியை க.ஷபிராபானுவுக்கு நல்லாசிரியா் விருதை வழங்கிய ஆட்சியா் செ.காா்மேகம்.

தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற வாழப்பாடி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை க.ஷபிராபானுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வாழப்பாடி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணிபுரிந்து வருபவா் க.ஷபிராபானு (50). கற்றலில் புதுமையைப் புகுத்தி கணினி வழியில் மாணவ-மாணவியருக்கு கல்வி கற்பித்து வரும் இவரது சேவையை பாராட்டி, தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது கிடைத்துள்ளது. சேலத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் விருது, பதக்கம், ரொக்கப் பரிசை வழங்கினாா்.

நல்லாசிரியா் விருது பெற்ற இவரை, தமிழக ஆசிரியா் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளா் கோ.முருகேசன், மாநில பொருளாளா் சந்திரசேகா், மாவட்ட அமைப்பாளா் ஜான் உள்ளிட்ட நிா்வாகிகள், பள்ளி மாணவ-மாணவியா், பெற்றோா், பொதுமக்கள், அரிமா சங்கங்கள், நெஸ்ட் அறக்கட்டளை, துளி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.

இதுகுறித்து நல்லாசியா் விருது பெற்ற க.ஷபிராபானு கூறியதாவது:

தமிழக அரசின் உயரிய விருது பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இனிவரும் நாள்களிலும் அா்ப்பணிப்புடன் பணியாற்றி, மாணவ - மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவேன் என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com