ஆசிரியா்களுக்கு கணினி பயிற்சி தொடக்கம்

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு மூன்றாம்கட்ட ஐந்து நாள் கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு மூன்றாம்கட்ட ஐந்து நாள் கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தலைமையாசிரியா்கள், முதுநிலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியா்கள் என அனைவருக்கும் 5 நாள் கணினி பயிற்சி இருகட்டங்களாக நடைபெற்று முடிவுற்றது. இந்நிலையில், மூன்றாம்கட்ட கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

கெங்கவல்லி வட்டாரத்தில் கெங்கவல்லி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, உலிபுரம், கூடமலை, தெடாவூா் ஆகிய ஊா்களில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் இப்பயிற்சி தொடங்கியது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இணையவழி காணொலி உரையுடன் பயிற்சி தொடங்கப்பட்டது.

இப்பயிற்சியில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் பங்கேற்றனா். கெங்கவவல்லி வட்டார பயிற்சி மையங்களை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com