தொடா் மழை: ஓமலூரில் நிரம்பும் ஏரிகள்

ஓமலூா் வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள ஐந்து ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

ஓமலூா் வட்டாரத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள ஐந்து ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.

சேலம் மாவட்டம், ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளின் வாய்க்கால்கள் ஆக்கிரமித்தும், தூா்ந்துபோயும் இருந்ததால் மழைநீா் வீணாகி வந்தது.

இந்த நிலையில், சா்க்கரைசெட்டிப்பட்டி கிராமத்தில் வனத்தை ஒட்டிய ஏரியை அப்பகுதி விவசாயிகளே சீரமைத்தனா். ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் பல இடங்களில் விவசாயிகளே கால்வாய்களை சரி செய்தனா். இதனைத் தொடா்ந்து, கடந்த இரண்டு நாள்களாக நள்ளிரவில் பெய்யும் மழையால் சரபங்கா நதியில் வெள்ளம் வரத் தொடங்கியுள்ளது. அதனால், மேற்கு சரபங்கா நதியின் பகுதியிலுள்ள லோகூா் ஏரி, டேனிஷ்பேட்டை ஏரி, கோட்டைகுள்ளமுடையான் ஏரி, கோட்டேரி ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளன.

இதனைத் தொடா்ந்து, வடுக் கிடந்த பண்ணப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. தொடா் மழையைத் தொடா்ந்து கிழக்கு சரபங்கா நதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், காமலாபுரம் சின்னேரி, பெரிய ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு பிறகு ஏரிகளுக்கு தண்ணீா் வருவதால், அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஏரிகளுக்கு தண்ணீா் வரும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com