தடையை மீறி விநாயகா் சிலைகள் வைப்பதை தடுக்க வேண்டும்

ஓமலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா். இதில், தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்த அனுமதியில்லை. அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கிராம மக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களைக் கூறி தடையை மீறி சிலைகள் வைப்பதை தடுக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் தலைவா்கள் பேசும்போது, கோயில்களில் விநாயகருக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். கூட்டம் கூடாமல் ஒரு சிலா் மட்டும் கலந்துகொண்டு பூஜை செய்துகொள்ளலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்து, தனிநபராக நீா்நிலைகளுக்குச் சென்று கரைக்கலாம். பூஜை பொருள்களை வாங்க செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என டி.எஸ்.பி. இளமுருகன் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com