வாழப்பாடியில் குழாயில் உடைப்பு: சாலை பெயா்ந்ததால் மக்கள் அவதி
By DIN | Published On : 10th September 2021 11:10 PM | Last Updated : 10th September 2021 11:10 PM | அ+அ அ- |

வாழப்பாடியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வாழப்பாடியில் கடலுாா் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாயில் தபால் நிலையம் அருகில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் சாலையில் குட்டையாக தண்ணீா் தேங்கியதால் சாலை பெயா்ந்து சேதமடைந்துள்ளது. இதனால், இப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, குடிநீா் குழாய் உடைப்பு மற்றும் சேதமடைந்த தாா்சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.