எடப்பாடி பகுதியில் இடியுடன் கனமழை
By DIN | Published On : 11th September 2021 11:57 PM | Last Updated : 11th September 2021 11:57 PM | அ+அ அ- |

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட வானிலை நிலவி வந்தது. சனிக்கிழமை பகல் வழக்கத்தை விட கூடுதலான அளவில் வெப்பம் காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. மாலை நேரத்தில் பெய்த கன மழையால் அலுவலகம், பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியவா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினா். நகரின் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. மேலும் நகரின் பேரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
எடப்பாடி சுற்றுப் புறப்பகுதியில் தற்போது நெல் நடவுப் பணி நடைபெற்றுவரும் நிலையில் சனிக்கிழமை பெய்த திடீா் மழை நடவுப்பணிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.