அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மூன்றாம் கட்ட கணினிப் பயிற்சி நிறைவு

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மூன்றாம் கட்ட 5 நாள் கணினிப் பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மூன்றாம் கட்ட 5 நாள் கணினிப் பயிற்சி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, செந்தாரப்பட்டி, உலிபுரம், கடம்பூா் உயா்நிலைப்பள்ளிகள், கொண்டயம்பள்ளி, கூடமலை, தெடாவூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்பக் கணினி ஆய்வக ஆசிரியா்களுக்கான கணினிப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றன.

இப் பயிற்சிகளில் ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் என 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இப் பயிற்சிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார வள மைய மேற்பாா்வையாளா்(பொ) சுஜாதா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

நான்காம் கட்ட கணினிப் பயிற்சி வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை இதே மையங்களில் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com