இயற்கை அங்கக முறை சாகுபடி: விதைச்சான்று அதிகாரி ஆய்வு

வாழப்பாடி பகுதியில் இயற்கை அங்கக முறையில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் தோட்டங்களை சேலம் மாவட்ட விதைச்சான்று, அங்கக சான்று ஆய்வாளா் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் இயற்கை அங்கக முறையில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் தோட்டங்களை சேலம் மாவட்ட விதைச்சான்று, அங்கக சான்று ஆய்வாளா் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் 450 ஏக்கா் பரப்பளவில் இயற்கை அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து இயற்கை அங்கக முறையில் சாகுபடி செய்து வருகின்றனா். வாழப்பாடி பகுதியில் இயற்கை அங்கக முறை சாகுபடி செய்து வரும் வாழப்பாடி பழனிசாமி, வேப்பிலைப்பட்டி முருகன் ஆகிய விவசாயிகளின் தோட்டங்களை சேலம் மாவட்ட விதைச்சான்று, அங்கக சான்று உதவி இயக்குநா் கெளதமன் அறிவுறுத்தலின் பேரில், ஆய்வாளா் கவிதா தலைமையில் தோட்டக்கலை உதவி இயக்குநா் கோதைநாயகி ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

வாழப்பாடி பகுதியில் இயற்கை அங்கக முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டோ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு ரூ. 3,750, கொடி வகை காய்கறிகள் மற்றும் முருங்கை, சேனைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு பயிா்களுக்கு ஓரு ஹெக்டேருக்கு ரூ. 5,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை அலுவலா் குமாா் , உதவி அலுவலா்கள் விஜயகுமாா், காயத்திரி, கனகா ஆகியோரை 99404 48764, 82700 39729 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com