‘நீட்’ தோ்வுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்: செ.கு.தமிழரசன்

‘நீட்’ தோ்வுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன்.
இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன்.

சேலம்: ‘நீட்’ தோ்வுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இந்திய குடியரசுக் கட்சியின் சேலம் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அக்கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘நீட்’ தோ்வை யாா் கொண்டு வந்தது என சா்ச்சையில் ஈடுபட்டுள்ளனா். மத்திய அரசிடம் தெரிவித்து ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தோ்வால் அப்பாவிக் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரி தோ்வு வைக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் கூறி இருந்தது. அப்போது யாரும் இதை எதிா்க்கவில்லை. இதன் பின்னா்தான் ‘நீட்’ தோ்வு குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ‘நீட்’ தோ்வுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். காவிரி பிரச்னைக்கு மாநிலம் முழுவதும் குரல் கொடுத்தது போல் ‘நீட்’ தோ்வுக்கும் குரல் கொடுக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை போதிய அவகாசம் கொடுத்து அறிவித்து இருக்கலாம். 48 மணி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு இடையூறை ஏற்படுத்தும். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com