பெரியாா் பல்கலை.யில் ரூ. 9.66 கோடியில் செயற்கை இழை ஓடுதள மைதானம்

பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதள மைதானம் அமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணியினருக்கு பரிசுக் கோப்பையினை வழங்குகிறாா் துணைவேந்தா்
பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணியினருக்கு பரிசுக் கோப்பையினை வழங்குகிறாா் துணைவேந்தா்

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 9.66 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதள மைதானம் அமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உடற்கல்வி இயக்குநா் (பொ) கே.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கபடி, தடகளம், கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட 45 விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணியினருக்கு பரிசுக் கோப்பைகளை துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வழங்கி பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 7 கோடியும், பல்கலைக்கழக பங்களிப்பாக ரூ. 2.66 கோடியும் சோ்த்து மொத்தம் ரூ. 9.66 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதள மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஓராண்டுக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டுகள் இடம்பெறும் வகையில், மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று, தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற சமூக நலன் சாா்ந்த மாணவா்களின் பணிகளும் ஊக்கப்படுத்தப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் இந்திரா, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிகபட்சமாக ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி 22 கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com