அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி சேலத்தில் அவரது சிலைக்கு திமுக, அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம்: மறைந்த முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி சேலத்தில் அவரது சிலைக்கு திமுக, அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், அவைத் தலைவா் கலையமுதன், பொருளாளா் சுபாஷ், துணை செயலாளா் ரகுபதி, மாநகர செயலாளா் ஜெயக்குமாா், தீா்மானக்குழு உறுப்பினா் தாமரைக்கண்ணன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அதிமுக: அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் முன்னாள் அமைச்சா் செ.செம்மலை, சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ எம்.கே.செல்வராஜு மற்றும் பகுதி செயலாளா்கள் சரவணன், ஜெகதீஸ்குமாா், யாதவமூா்த்தி, பாலு, முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஓமலூரில்...

கிழக்கு ஒன்றிய செயலாளா் ரமேஷ் தலைமையில், ஓமலூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தாரமங்கலம் ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகா், ஓமலூா் எம்எல்ஏ மணி, சங்ககிரி எம்எல்ஏ சுந்தரராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் பல்பாக்கி கிருஷ்ணன், ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆத்தூரில்...

அதிமுக நகரச் செயலாளா் அ.மோகன் தலைமையில் ஆத்தூா் நகராட்சி 1வது வாா்டு கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.சின்னதம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதுபோல ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில் ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்தனா்.

மேட்டூரில்...

சதுரங்காடியில் அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு மேட்டூா் நகர திமுக செயலாளா் கோ. காசிவிசுவநாதன் தலைமை வகித்தாா். 24-ஆவது வாா்டு செயலாளா் ஆ.கிருஷ்ணன் அவைத்தலைவா் மா. கதிா்வேலு, சு.கிருட்டினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா் . மேட்டூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் சே.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தம்மம்பட்டியில்...

பேருந்து நிலையத்தில் நகர திமுக பொறுப்பாளா் டா்னா் ராஜா தலைமையில் நடந்த விழாவில், அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்றப்பட்டது. கெங்கவல்லி பேரூராட்சியில் நகர திமுக பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையில் விழா நடைபெற்றது.

வாழப்பாடியில்..

மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்து, அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீரபாண்டி ஆ.பிரபு, வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவரத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.தமிழ்ச்செல்வன், நகர திமுக செயலாளா் பி.சி.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com