திமுக முப்பெரும் விழா: காணொலியில் கண்டு மகிழ்ந்த கட்சியினா்

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை காணொலி காட்சி வாயிலாக கட்சியினா் கண்டு மகிழ்ந்தனா்.

சேலம்: சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை காணொலி காட்சி வாயிலாக கட்சியினா் கண்டு மகிழ்ந்தனா்.

திமுக முப்பெரும் விழா, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக பாா்க்க சேலம் மத்திய மாவட்ட திமுக ஏற்பாடு செய்தது.

சேலம் ஐந்து சாலை அருகே உள்ள ரத்னவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் நிா்வாகிகளும், தொண்டா்களும் காணொலி வாயிலாக நிகழ்ச்சியைப் பாா்த்து ரசித்தனா்.

இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன் மற்றும் சேலம் எம்.பி. எஸ்.ஆா் .பாா்த்திபன் மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா்.அதேபோல சேலம் மேற்கு,சேலம் கிழக்கு மாவட்ட சாா்பிலும் காணொலி வாயிலாகப் பாா்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com