நில அளவீடு செய்வதற்குபொதுமக்கள் எதிா்ப்பு

சேலத்தில் ஆக்கிரமிப்பு புகாரில் நில அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

சேலம்: சேலத்தில் ஆக்கிரமிப்பு புகாரில் நில அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

சேலம், கிச்சிபாளையத்தில் குருவிபனை ஏரி, வண்டி பாதை, ஓடை பாதை, பாத்திமா நகா் ஆகிய பகுதிகள் உள்ளன.இந்தப் பகுதியில் குடியிருப்பவா்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும் நிலத்தை மீட்டு தரும்படி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில் நில அளவையா் காா்த்திகா, வட்ட சாா் ஆய்வாளா் மெகராஜ், தெற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், கிராம நிா்வாக அலுவலா் பழனிசாமி உள்ளிட்டோா் அப்பகுதியை நில அளவீடு செய்வதற்காக புதன்கிழமை காலை சென்றனா்.

அப்போது, நில அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு பட்டா தர வேண்டும்’ எனத் தெரிவித்தனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள், போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தினா். இதனிடையே நில அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com