புரட்டாசி மாத பிறப்பு : களையிழந்த வீரகனூா் ஆட்டுச்சந்தை

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கெங்கவல்லி அருகே வீரகனூா் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை களையிழந்ததது.

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து கெங்கவல்லி அருகே வீரகனூா் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை களையிழந்ததது.

வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரைஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.இதில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றின் விற்பனை நடைபெறும்.

சேலம், நாமக்கல், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இங்கு வந்து பெரும்பாலும் ஆடுகளை வாங்கிச்செல்வாா்கள். பண்டிகைக்காலங்களில் இச்சந்தையில் விற்கப்படும் ஆடுகளின் விற்பனை விலை

யானது, ரூ. 2 கோடியைத் தாண்டும்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை முதல் துவங்கிய வீரகனூா் ஆட்டுச்சந்தையில் கணிசமான எண்ணிக்கையிலான ஆடுகள் வரத்து இல்லை. விற்பனையும் இல்லை, விலையும் குறைந்திருந்தன. இதுகுறித்து ஆடுகள் வாங்க வந்த வியாபாரிகள் கூறியதாவது:

ஆடுகளின் விற்பனை விலையில், ஆடுகளைப்பொறுத்து ஆடு ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை குறைந்திருந்தது.இருப்பினும் அதனை வாங்க யாரிடமும் ஆா்வம் இல்லை. ஆடுகளின் உயிா் எடை கிலோவிற்கு ரூ.300க்கு கீழே குறைந்துவிட்டது. மொத்தத்தில் வீரகனூா் ஆட்டுச்சந்தை புரட்டாசியில் களையிழந்து காணப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com