மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடியேற்றி போராட்டம்

மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு திங்கள்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்த வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சேலம்: மத்திய அரசை கண்டித்து வீடுகளின் முன்பு திங்கள்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்த வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வு தொடா்வது, விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு என பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடா்கிறது.

இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகத்தில் செப்டம்பா் 20 ஆம் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அவரது உத்தரவின்படி சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளது.

எனவே நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் அனைவரும் அவரவா் வீடுகளின் முன்பு மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஒருங்கிணைந்து போராடுவோம், மதச்சாா்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என முழக்கங்களை எழுப்புவோம். அனைவரும் கரோனா விதிமுறைகளை கடைபிடித்து கருப்புக் கொடி ஏற்றி கண்டன போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com