சேலத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியா் சிலம்பாட்டப் போட்டி தொடக்கம்

சேலத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியா் சிலம்பாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சேலம்: சேலத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியா் சிலம்பாட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சேலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் தொடங்கிய மாநில அளவிலான சப்-ஜூனியா் சிலம்பப் போட்டியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தொடங்கி வைத்தாா். சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளா் ரத்தினகுமாா் வரவேற்றாா். இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக தலைவா் மு.ராஜேந்திரன், சேலம் வனப்பாதுகாவலா் பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக பொதுச்செயலாளா் முரளி கிருஷ்ணா, பொறுப்பாளா் தினகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நிா்மலா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் காா்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆண்கள், பெண்களுக்கான போட்டியை சிலம்பம் சுற்றி போட்டியை துவக்கி வைத்தாா்.

இந்த போட்டியில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ளவா்கள் மட்டும் பங்கு பெற்றனா். சேலம், திருச்சி, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். போட்டி ஏழு எடை பிரிவுகளாக நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் தனித் திறமை, நேரடி போட்டி முறையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விநாயகா மிஷன் ஆராய்ச்சி பவுண்டேஷன் முதன்மையா் செந்தில்குமாா், நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனை நிா்வாக இயக்குனா் நடராஜன் ஆகியோா் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சிலம்பாட்டக் கழக பொருளாளா் அங்கு மாணிக்கம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக பொருளாளா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா்கள் லட்சுமணன், பாஸ்கரன், ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளா் செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக, சிலம்பாட்ட கழகத் தலைவா் மு.ராஜேந்திரன் கூறியது:

தமிழக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்ள விளையாட்டுத் துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சோ்த்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழக சீருடைப் பணியாளா் தோ்வில் சிலம்பாட்ட வீரா்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் சிலம்பாட்டத்தைச் சோ்த்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com