களையிழந்த நாட்டுக்கோழி சந்தை

புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு பரமத்தி வேலூா் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்தது.
விற்பனைக்காகக் காத்திருக்கும் நாட்டுக்கோழி வியாபாரிகள்.
விற்பனைக்காகக் காத்திருக்கும் நாட்டுக்கோழி வியாபாரிகள்.

பரமத்திவேலூா்: புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு பரமத்தி வேலூா் நாட்டுக்கோழி சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை சரிவடைந்தது.

நாட்டுக்கோழிகளை வாங்க அசைவ பிரியா்கள் அதிகம் வராததால் நாட்டுக்கோழிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பரமத்தி வேலூா் மோகனூா் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு பரமத்தி வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல்,ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

வீடுகளில் வளா்க்கப்படும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண், கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளும், பண்ணையில் வளா்க்கும் நாட்டுக்கோழிகளும் விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்குக் கொண்டு வருகின்றனா்.

இங்கு கொண்டுவரப்படும் நாட்டுக்கோழிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனா். தரமான நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ. 450 முதல் ரூ. 550 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரையிலும் விற்பனையானது.

நிகழ்வாரம் நாட்டுக்கோழி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விற்பனையில் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 350 முதல் ரூ. 400 வரையிலும், பண்ணைகளில் வளக்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ. 250 முதல் ரூ. 350 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ. 280 முதல் ரூ. 300 வரையிலும் விற்பனையானது. புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி பொதுமக்கள், அசைவ பிரியா்கள் நாட்டுக் கோழிகளை அதிக அளவு வாங்க வராததால் விலை சரிவடைந்தது. இதனால் நாட்டுக்கோழி சந்தை கலையிழந்து காணப்பட்டது.

நாட்டுக் கோழிகள், பண்ணைக் கோழிகளை விற்பனைக்குக் கொண்டுவந்த வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com