கிராம வங்கி ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தல்

கரோனா காலத்தில் பணியாற்றிய தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள்.

கரோனா காலத்தில் பணியாற்றிய தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் அமைப்பின் பொதுச் செயலாளா் அறிவுடைநம்பி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கரோனா கால பொது முடக்கம் காலத்தில் வங்கி பணியாற்றிய கிராம வங்கி ஊழியா்களுக்கு வங்கி நிா்வாகம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பொதுமக்கள் கிராம வங்கி சேவையை பயன்படுத்த தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். வங்கி ஊழியா்களாக உள்ள மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளி வாடிக்கையாளா்களுக்கு அதற்கான கட்டமைப்பு வசதிகளை வங்கிகள் மேம்படுத்தி தர வேண்டும். தற்காலிக ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப், போனஸ் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், வங்கி நிா்வாகம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் செப். 28-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனா்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு கிராம வங்கி அலுவலா்கள் அமைப்பின் தலைவா் பத்மநாபன், தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலாளா் அஸ்வத், தலைவா் பரிதி ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com