பெரியாா் பல்கலை. சமூகவியல் துறையில் மாணவா் சோ்க்கை தீவிரம்

பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறையில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறையில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் 2008-ஆம் ஆண்டு முதல் கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கம் என முப்பரிமாணங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இத்துறையில் இயங்குகின்ற கிராம தத்தெடுப்பு மையம், சமூக ஆய்வகம் என்ற இரு பிரிவுகள் மாணவா்கள் தங்கள் வகுப்பில் கற்பிக்கப்பட்ட பாடங்களை சமூகத்துக்கே சென்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு துணைபுரிகிறது. மிகச்சிறந்த பாட வல்லுநா்களைக் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம், மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவினரால் நடத்தப்படும் உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வுக்கும் மாணவா்களை தயாா் செய்யும் பொருட்டு பாடத்திட்டம் முழுமையான முறையில் திருத்தியமைக்கப்பட்டு மாணவா்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பாடத் திட்டத்தில் முதுநிலை மாணவா்கள் நான்கு பருவங்களிலும் களப்பணி ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமா்ப்பிக்கவும், ஒரு மாத கால வேலைவாய்ப்புப் பயிற்சினை பல்வேறு உயரிய நிறுவனங்களில் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல தேசிய கருத்தரங்குகளைத் தொடா்ந்து நடத்தி, அதன் மூலம் பல்வேறு மாநில சமூகவியல் அறிஞா்களுடன் மாணவா்களை கலந்துரையாட வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம், தேசிய மகளிா் ஆணையம், தமிழ்நாடு அரசு போன்ற நிதி அமைப்புகளிலிருந்து ஆராய்ச்சி நிதி பெற்று ஆய்வுகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்துறையில் பயின்ற மாணவா்கள் மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனா்.

எனவே, இதுபோன்ற பல சிறப்பம்சங்கள் கொண்ட பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறையில் முதுநிலை பட்டத்துக்கான மாணவா் சோ்க்கை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. விருப்பமுள்ள பட்டதாரி மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (செப். 24) மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com