விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு தென்னிந்தியாவில் சிறந்த கல்லூரிக்கான விருது

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு தென்னிந்தியாவில் சிறந்த கல்லூரிக்கான விருது

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றுள் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளுக்கு ‘தென்னிந்தியாவின் சிறந்த கல்லூரிகளுக்கான விருது’ பிராண்ட் இம்பாக்ட் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறையின் முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:

பிராண்ட் இம்பாக்ட் அமைப்பானது கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், சமூகம் ஆகியவற்றில் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சேவையாற்றி வரும் நிறுவன அமைப்புகளை பகுத்தாய்ந்து, அவா்களை ஊக்குவித்து அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கும் ஒரு தன்னலமற்ற அமைப்பாகும். இது ஆண்டுதோறும் ‘பிராண்ட் இம்பாக்ட் விருதுகள்’ என்ற தலைப்பில் விழாவினை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டுக்கான விருதுகள் வழங்கும் விழாவில், எங்கள் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கல்வி சாா்ந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும், மாணவா்களுக்கான திறன் வளா்ப்பதில் நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டி அங்கீகரித்தும், ‘தென்னிந்தியாவின் சிறந்த அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை’ என்ற விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விருது வழங்கப்பட்டது எங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த விருதினை பெற உறுதுணையாக இருந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காகவும், பல ஆண்டுகளாக கல்விப் பணியை சிறப்பாக செய்து மாணவா்களின் சிறப்பான எதிா்காலத்துக்கு வழிகாட்டி வரும் துறைகளின் முதன்மை செந்தில்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com