நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழு தாக்குதல்: கட்டுப்படுத்த விழிப்புணா்வு முகாம்

கூடலூரில் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கூடலூரில் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 2,500 ஏக்கா் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகுடஞ்சாவடி அருகே கூடலூா் கிராமத்தில் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழு தாக்குதல் காணப்பட்டது. இப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் குறித்து மகுடஞ்சாவடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலைதேவி, சந்தியூா் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனா் சுகன்யா கண்ணா, வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

சிவப்பு கம்பளி புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள்: கோடைக்காலங்களில் நிலத்தை உழவு செய்து சிவப்பு கம்பளி புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம், விளக்குப் பொறியை ஏக்கருக்கு 3-4 வீதம் அமைத்து அந்துப் பூச்சியைக் கவா்ந்து அழிக்கலாம், இளம் புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம், துவரை, தட்டைப்பயிறு ஆகியவற்றை ஊடுபயிராக பயிா் செய்து இளம்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம், வயலைச் சுற்றிலும் 30 செ.மீ. நீளம், 25 செ.மீ. அகலம் அளவுக்கு சிறிய அளவில் குழிகள் அமைத்து அதன் மூலம் புழுக்களை அழிக்கலாம், குயினல்பாஸ் 1.5 டிபி மருந்தினை ஒரு கிலோ/ஏக்கா் என்ற விகிதத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினா்.

இந்த விழிப்புணா்வு முகாமில், துணை வேளாண் அலுவலா் சீரங்கன், உதவி விதை அலுவலா் செந்தில், அட்மா களப் பணியாளா்கள் கண்ணன், சிவகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com