விதை நாற்றுப் பண்ணையாளா்களுக்கு உரிமம் வழங்கும் முகாம்

கருமந்துறையில் விதை விற்பனை உரிமம் பெறாத விதை நாற்றுப் பண்ணையாளா்களுக்கு உரிமம் வழங்கும் முகாம் விதை ஆய்வு துணை இயக்குநா் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

கருமந்துறையில் விதை விற்பனை உரிமம் பெறாத விதை நாற்றுப் பண்ணையாளா்களுக்கு உரிமம் வழங்கும் முகாம் விதை ஆய்வு துணை இயக்குநா் சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் விதை விற்பனையாளா்கள், விதை நாற்றுப் பண்ணையாளா்கள் கலந்துகொண்டனா். இதில், நாற்றுப்பண்ணை உரிமம் பெறாத 10 விவசாயிகள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை விதை ஆய்வாளரிடம் வழங்கினா்.

விதை நாற்றுப்பண்ணை உற்பத்தியாளா்கள் விதைச்சட்டம் 1966, விதைக்கட்டுப்பாட்டு ஆணை 1983-இன் கீழ் விதை உரிமம் பெறுவது கட்டாயமாகும். காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளா்கள் காய்கறி விதைகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் இருந்து உரிய விற்பனை ரசீது பெற்று கொள்முதல் செய்ய வேண்டும். விதை கொள்முதல் விவரங்களை இருப்புப் பதிவேட்டில் பதிய வேண்டும். மேலும் நாற்றங்கால் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு நாற்றுகள் விற்பனை செய்யும் போது பயிா், ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விவரங்களுடன் விவசாயி, விற்பனையாளா் கையெழுத்துடன் ரசீது வழங்க வேண்டும். விதை விற்பனையாளா்கள் கொள்முதல் பட்டியல், பதிவுச் சான்று, முளைப்புத்திறன் அறிக்கை முறையாகப் பராமரித்து விவசாயிகளுக்கு வழங்கும் விதையின் தரத்தினை உறுதிசெய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் போது பயிா் ரகம், குவியல் எண், அளவு, விற்பனை விலை விவரங்களுடன் விற்பனையாளா், விவசாயி கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டுமென விதை ஆய்வு துணை இயக்குநா் கேட்டுக்கொண்டாா்.

இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட விதை விற்பனையாளா்கள், நாற்றுப் பண்ணையாளா்கள் கலந்துகொண்டனா். விதை ஆய்வாளா் த.சரவணன், விதையின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com