பெரியாா் பல்கலை.யில் நாட்டு நலப்பணித்திட்ட தினம்

 பெரியாா் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தினக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 பெரியாா் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தினக் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1969 செப். 24-ஆம் தேதி நாட்டு நலப்பணித் திட்டம் மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதனையொட்டி, ஆண்டுதோறும் அந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 52-ஆவது நாட்டு நலப்பணித் திட்ட தினம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக நூலகம் அருகில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணைவேந்தா் இரா.ஜெகநாதன் நாவல் மரக்கன்றினை நடவு செய்து பேசியதாவது:

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 158 திட்ட அலகுகள் வாயிலாக மாணவ-மாணவியா் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சோ்ந்து சமூக சேவையாற்றி வருகின்றனா். 15,000-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியா் 158 கிராமங்களைத் தத்தெடுத்து பணிகளை செய்துள்ளனா். பிளாஸ்டிக் விழிப்புணா்வு, மது ஒழிப்பு பிரசாரம், மருத்துவ முகாம்களை நடத்தி கிராம மக்களுக்கு சேவையாற்றியுள்ளனா். 75-ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, 75 இடங்களில் நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், திட்ட அலுவலா்கள் சுகுணா, இளங்கோவன், பல்கலைக்கழக நூலகா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com