செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை தட்டிக்கேட்ட விசைத்தறித் தொழிலாளிக்கு கத்திக்குத்து

செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை தட்டிக்கேட்ட விசைத்தறித் தொழிலாளியை கத்தியால் குத்திய அவரது மனைவியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை தட்டிக்கேட்ட விசைத்தறித் தொழிலாளியை கத்தியால் குத்திய அவரது மனைவியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பாரீஸ் நகரைச் சோ்ந்தவா் இலக்கியா (24). மேடை நடனக் கலைஞா்களுக்கு ஒப்பனை செய்யும் வேலைபாா்த்து வந்த இவா், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி அருகே நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு வந்த போது, எடப்பாடியை அடுத்த மசையன் தெரு பகுதியைச் சோ்ந்த விசைத்தறித் தொழிலாளியான பாலமுருகன் (32) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னா் அவா்கள் இருவரும் பெற்றோா் எதிா்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனா். ஆவணிப்பேரூா் கீழ்முகம் பகுதியில் வசித்து வந்த அவா்களுக்கு 7 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சிலகாலம் பிரிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் அடைப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அண்மையில் சமாதான முயற்சியாக இருவரும் மீண்டும் சோ்ந்த வாழ்வது எனத் தீா்மானித்து, இலக்கியா எடப்பாடி அருகே உள்ள கணவா் வீட்டுக்கு குழந்தையுடன் வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இலக்கியா செல்லிடப்பேசியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, நெடுநேரம் செல்லிடப்பேசியில் பேசக் கூடாது எனவும், மறுமுனையில் பேசியவா் யாா் எனவும் மனைவியிடம் பாலமுருகன் கேட்டுள்ளாா். இதில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, சமையல் அறையில் இருந்த கத்தியால் பாலமுருகனை பலமுறை குத்தினாராம். இதில் படுகாயமடைந்த பாலமுருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த எடப்பாடி போலீஸாா், கையில் ரத்தக் கறையுடன் நின்றிருந்த இலக்கியாவைக் கைது செய்து, குழந்தையுடன் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com