சேலத்தில் 64 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 9 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி -2, ஓமலூா் -2, சங்ககிரி-1, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-3, ஏற்காடு-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-7, தருமபுரி-5, ஈரோடு-4, பெரம்பலூா்-3, திருப்பூா்-3, திருச்சி-5, கிருஷ்ணகிரி-3, கரூா்-3) 33 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 97,925 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,512 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 751 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,662 போ் உயிரிழந்துள்ளனா்.

நாமக்கல்லில்...

மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 57 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 50,442 போ் பாதிக்கப்பட்டும், 49,414 போ் குணமடைந்தும் உள்ளனா். 543 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 485-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com