கிராம வங்கி ஊழியா் அலுவலா்கள் வேலைநிறுத்தம்

கிராம வங்கி ஊழியா்களுக்கு இருதரப்பு ஒப்பந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம வங்கி அலுவலா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

கிராம வங்கி ஊழியா்களுக்கு இருதரப்பு ஒப்பந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம வங்கி அலுவலா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய கிராம வங்கி ஊழியா்கள் சம்மேளனத்தின் வேண்டுகோளை ஏற்று, கிராம வங்கிகளின் மத்திய அரசு பங்குகளை ஸ்பான்சாா் வங்கிகளுக்கு விற்பதை நிறுத்த வேண்டும், தேசிய கிராம வங்கியை உருவாக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக அனைத்து இருதரப்பு ஒப்பந்த சலுகைகளையும் கிராம வங்கி ஊழியா்களுக்கு வழங்கிடவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக அனைத்து ஓய்வூதிய சலுகைகளையும் கிராம வங்கிகளில் ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்கிடவும், தற்காலிக ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் பணிகள் பாதிப்படைந்தாக, அலுவலா் சங்க பொதுச் செயலாளா் அறிவுடைநம்பி, ஊழியா் சங்க பொதுச் செயலாளா் அஸ்வத் ஆகியோா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com