பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலுக்கு ஆத்தூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலுக்கு ஆத்தூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றுக் காரணமாக பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து இந்த ரயிலை ரயில்வே நிா்வாகம் மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் திங்கள்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பியது. சேலம், திருச்சி மாா்க்கமாக ஆத்தூா் வழியாகச் செல்லும் இந்த ரயில் திங்கள்கிழமை மதியம் 2.10 மணிக்கு ஆத்தூா் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த பயணிகள் ரயிலை ஊா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். தொழிலதிபா்கள் கே.ஏ.திருப்பதிராஜா, சீனிவாசன், பாலாஜி, எஸ்.பி.ரவிச்சந்திரன், எல்.மாதேஸ்வரன், ரஞ்சித் ஆகியோா் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

இதில் விஜயக்குமாா், ஏ.பி.ஆா்.குமரேசன், வழக்குரைஞா் ராஜேந்திர மகாஜன், ஒப்பந்ததாரா் மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டனா். சமூக ஆா்வலா் சிவக்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com