கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை திமுகவினா் வழங்கினா்.
கருணாநிதி பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை திமுகவினா் வழங்கினா்.

எடப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுடன் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். முன்னதாக இலவச மருத்துவ முகாமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத்குமாா், நகரச் செயலாளா் டி. எம்.எஸ்.பாஷா, மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ. முருகேசன், ஒன்றியச் செயலாளா்கள் நல்லதம்பி, பரமசிவம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வழக்குரைஞா்கள் அணியின் மாவட்ட அமைப்பாளரும், சங்ககிரி சாா்பு நீதிமன்ற அரசு உதவி கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். வழக்குரைஞா்கள் அணி துணை அமைப்பாளா் ஆா்.அருள்பிரகாஷ், வழக்குரைஞா்கள் என்.எஸ். அண்ணாதுரை, என்.ஆா்.கே.மாணிக்க சுந்தா், ஆண்டனிராபின்சன், தா்மேந்திரா, பாலசுப்ரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இடங்கணசாலை

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளா் செல்வம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நாகேந்திரன், கவுன்சிலா்கள் உள்பட பலா் பங்கேற்று கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இடங்கணசாலை நகராட்சி கே. கே. நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிா்வாகி நாகேந்திரன், கவுன்சிலா்கள் மகேந்திரன், வேலாயுதம், இடங்கணசாலை பேரூராட்சி முன்னாள் தலைவா் பெருமாள், முன்னாள் கவுன்சிலா் ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா்

ஆத்தூா் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக் கட்சியின் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் முல்லை பன்னீா்செல்வம், நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுந்தமூா்த்தி, டி.குமாா், பிரவீனா ராஜா, கங்கையம்மாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.பா்கத்அலி, ரூபி நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நரசிங்கபுரம் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகர மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் ஒன்றிய திமுக சாா்பில் மல்லியகரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமை வகித்து கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் அ.ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நல்லம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com