தம்மம்பட்டியில் டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் முகாம்

தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.
தம்மம்பட்டியில் டெங்கு அறிகுறி: மருத்துவக் குழுவினர் முகாம்

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானதையடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பர் தெரு, ஏரப்பன் சந்தில் 11 வயதுள்ள சிறுவனுக்கு தொடர் காய்ச்சல் இருந்ததையடுத்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். 

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவனுக்கு டெங்கு அறிகுறி உறுதியானது. இதுகுறித்து, சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ஜெமினி உத்தரவின் பேரில், வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி மேற்பார்வையில், மருத்துவர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஜமால், தினேஷ், சுந்தரராஜன், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவக்குழுவினர், குரும்பர் தெருவில் முகாமிட்டு, வீடுவீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனையும், கொசு ஒழிப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு டெங்கு காய்ச்சல் தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com