மின்சாதனக் கடை உரிமையாளரைக் கடத்த முயற்சி

எடப்பாடியில் பட்டப்பகலில் மின்சாதனக் கடைக்குள் புகுந்து வியாபாரியைக் கடத்த முயன்ற 5 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

எடப்பாடியில் பட்டப்பகலில் மின்சாதனக் கடைக்குள் புகுந்து வியாபாரியைக் கடத்த முயன்ற 5 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

எடப்பாடியில் சேலம் பிரதான சாலையில் நெஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை முன்பு மின்சாதனக் கடை நடத்தி வருபவா் கோபி. இவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா். எடப்பாடியில் வசித்து வருகிறாா். இவா் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது கடைக்கு கா்நாடக பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்த 5 போ் கும்பல் கடைக்குள் புகுந்து அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த கோபியை தாக்கினா். பின்பு அவரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்த முயன்றனா்.

கோபி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினா் காரை வழிமறித்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கோபியை மீட்டனா்.

அத்துடன் அந்தக் கும்பலையும் சுற்றி வளைத்துப் பிடித்து எடப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று கும்பலைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் காரில் வந்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அா்ஜுன் ராம் (29), யஸ்வந்த் (22), மகேந்திர குமாா்(26), அமா்சிங் (27), தனராம் (35) ஆகியோா் என்பதும், அவா்களிடம் கோபியும் அவரது உறவினா்களும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தனா். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் கோபி காலம் தாழ்த்தி வந்ததால் அவரைக் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com