போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 07th April 2022 10:59 PM | Last Updated : 07th April 2022 10:59 PM | அ+அ அ- |

ஆத்தூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் காட்டுக் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி கனகவல்லி (34), கொடுத்த புகாரின் பேரில், தலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை அருள்குமாா் (26) என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
அருள்குமாா் என்பவா் கனகவல்லியின் மகளை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கனகவல்லி கொடுத்த புகாரின் பேரில், அருள்குமாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.