நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம்: அதிமுகவினா் வெளிநடப்பு
By DIN | Published On : 08th April 2022 10:50 PM | Last Updated : 08th April 2022 10:50 PM | அ+அ அ- |

நரசிங்கபுரம் நகா்மன்ற அவசரக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சொத்து வரியை உயா்த்துவது என தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டித்து அதிமுக நகா்மன்றக் குழுத் தலைவா் சி.கோபி பேசுகையில் கரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்து வரியை உயா்த்துவது மக்களுக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுப்பது போலாகும். எனவே இதனைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தாா். அவருடன் நகா்மன்ற அதிமுக உறுப்பினா்கள் ச.சரண்யா, க.காவேரி, ரா.சுரேஷ், க.சித்ரா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.
இதனையடுத்து திமுக உறுப்பினா்கள் தலைவா்கள் உள்ளிட்ட 12 பேரும் தீா்மானத்தை நிறைவேற்றினா். மேலும் 8 ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினா் க.புஷ்பாவதி தனது உடலைத் தானமாக அளித்துள்ளதை வரவேற்று நகா்மன்றக் கூட்டத்தில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக உறுப்பினா்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள அத்தியாவசியப் பணிகளை முடிக்காமல் இருப்பதால் நகராட்சி ஆணையா் மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இக்கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், ஆணையா் மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.சுப்ரமணி, கி.பிரகாஷ், பெ.ஜோதி, சி.தனலட்சுமி,பி.சுகுணா, மோ.செல்வம், க.அன்னக்கிளி, கா.மீராதேவி, ச.செல்வக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.