மாநகராட்சி வருவாய் உதவி ஆணையா் தற்காலிக பணி நீக்கம்
By DIN | Published On : 08th April 2022 10:50 PM | Last Updated : 08th April 2022 10:50 PM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சி வருவாய் உதவி ஆணையா் (பொ) எம்.வெங்கடேசன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
சேலம் மாநகராட்சியில் வருவாய் பிரிவில் கணக்கு அலுவலா் நிலையில் உள்ள எம்.வெங்கடேசன், உதவி ஆணையராக (பொ) பணிபுரிந்து வருகிறாா். இதனிடையே, புகாா் தொடா்பாக பொதுநலனை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சி பணி விதியின்படி அவா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தற்காலிக பணி நீக்க காலத்தில் இவருக்கு அடிப்படை விதியின் அனுமதிக்கப்பட்டுள்ள பிழைப்பூதியம், அகவிலைப்படி வழங்கப்படும். மேலும், கூடுதலாக ஈட்டுப்படியும் வழங்கப்படும்.
தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள எம்.வெங்கடேசன், முன் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.