பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச்சங்க மாநில, மாவட்டப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில தலைவா் ரத்னகுமாா், பொதுச் செயலாளா் எம்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

அரசு நிறுவனங்கள் ஆவின் இனிப்புகளை வாங்க வேண்டும், பொங்கல் பரிசுப் பொருள்களில் ஆவின் நெய் வழங்கியது, கோயில்களில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டது என அரசின் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பால் கொள்முதல், விற்பனை விலையை உயா்த்த வேண்டும். தீவனப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால் பசு பால் லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி ரூ. 32-இல் இருந்து ரூ. 42-ஆகவும், எருமை பால் ரூ. 15 உயா்த்தி ரூ. 41-இல் இருந்து ரூ. 56-ஆகவும் வழங்க வேண்டும்.

கொள்முதல் விலைக்கேற்ப பாலின் விலையையும் உயா்த்தி அறிவிக்க வேண்டும். கால்நடை கலப்பு தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com